Breaking
Sun. Mar 16th, 2025
SONY DSC
– அப்துல் அஸீஸ் – 
அட்டாளைச்சேனை  பிரதேசத்தை சேர்ந்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று ( 14 ) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய குழு ஆலோசகராக பணியாற்றிய,  மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ  உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட்  ரியாஸ்யின்  தலைமையில்  40பேர்கள்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி  வை.எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இன்று  இணைந்து கொண்டனர்.
மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ  உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட்  ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி  வை.எல்.எஸ்.ஹமீட்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளரும் – கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான  அன்வர் முஸ்தபா ,  புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும்  அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் கல்முனை தொகுதி இணைப்பாளர்  எ.எல்.எம்.அஸ்ரப் உட்பட அட்டாளைச்சேனை  பிரதேச கட்சி பிரதிநிதிகள்  பலரும் கலந்து கொண்டனர்.
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC

Related Post