Breaking
Mon. Dec 23rd, 2024
குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பொல தேர்தல் தொகுதியின் எலபடகம பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று (03), மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நஸீர் முன்னிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பம்மன்ன கிளைச் சங்க தலைவர் நஸ்மிர் மற்றும் எலபடகம ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் சிராஸ் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடுகம்ப தொகுதி, எலபடகம, பம்மன்ன பகுதியின் எதிர்கால அபிவிருத்தி விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வட்டார கிளையும் அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், குளியாப்பிடிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் தலைவர் எம்.சி.இர்பான், குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் சபீர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் இளைஞர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(றி)

Related Post