அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய நிதிஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2019.07.02) முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
கிராமங்களிடையே அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் முகமாக நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி விடயங்களை கேட்டறிந்து கொண்டதோடு பிரதேசத்தில் நடைபெறும் வேலைத்திட்டங்களை முடிப்பதோடு மேலும் முக்கிய வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது…
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது முசலி பிரதேச இணைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அலிகான் ஷரீப் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் மன்னார் மாவட்ட திட்ட பணிப்பாளர் முஜிபுர் ரகுமான் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.