Breaking
Mon. Dec 23rd, 2024

முசலியில் மின்சாரம் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளவும்

முசலிப் பிரதேசத்திலுள்ள சிலாவத்துறை, முசலி, கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா, சவேரியார்புரம் ஆகிய கிராமங்களில் இதுவரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு உடனடியாக இலவச மின்னிணைப்பு பெற்றுக் கொடுக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே எனது வட்டாரத்திற்குள் அடங்கும் மேற்படி 5 கிராம மக்களில் மின்சாரம் இல்லாத குடும்பங்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

இன்ஷா அல்லாஹ் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முசலிப் பிரதேச மக்களின் மின்சாரத் தேவையை 100 வீதம் பூர்த்தி செய்யும் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் விருப்பத்திற்கிணங்க இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

முகுசீன் றயீசுத்தீன்
உப தவிசாளர்
முசலி பிரதேச சபை

Related Post