Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்றையதினம் (02) மன்னார் முசலி அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் அகத்தி முறிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஹனீப் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் விளையாட்டுக்கழகங்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் ” மன்னார் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலையான முசலி அரசினர் கலவன் பாடசாலை உண்மையில் சிறந்த ஒரு பாடசாலை சிறந்த ஆசியர்களை கொண்டுள்ள பாடசாலை சிறந்த ஒழுக்கமான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலை இதற்கு சான்றாக சென்ற வருடம் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள் இருக்கின்றார்கள்.

பள்ளிப் பருவமானது வாழ்வில் ஒரு பசுமையான துடிப்பான ஒரு காலம் இந்த பசுமையான காலத்தை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி தன் கல்வி,விளையாட்டு, மற்றும் சுய திறனை யார் வெளிக்காட்டுகின்றார்களோ அவர்களே வாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள். அதுமட்டுமல்லாது சிறந்த படிப்பாற்றலையும் சிறந்த விளையாட்டு திறமையினையும் வைத்து முன்னேறி விடவும் முடியாது. மாறாக ஒழுக்கமான கல்வி ஒழுக்கமான பண்புகள் இருந்தால் மட்டுமே சிறந்த ஒரு இடத்தை அடைய முடியும் அந்த வகையில் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்தவர்கள் ஒழுக்கமானவர்கள்

நல்ல முறையில் கல்வி ஆற்றல் கொண்டவர்கள் இந்த ஒழுக்கம் உங்கள் அனைவரிடத்திலும் என்றும் இருக்க வேண்டும் ஒற்றுமை இருக்க வேண்டு என்றும் தொடர்ந்து வெற்றியடைய வேண்டும் ” என தெரிவித்தார்.

-A.R.A.RAHEEM –

a a66-1

By

Related Post