Breaking
Thu. Jan 16th, 2025

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் 7,500 கிலோ உருளை கிழங்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளினை அடுத்து நேற்று (01) முசலி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது.

அதனை அடுத்து முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ விகீதம் பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய் ஆகியோரினால் நேற்று மாலை கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பள்ளி நிவர்வாகம் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

இன் நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, முசலி பிரதேச செயலாளர், பிரதேச மக்களின் தேவைகளை இனம் கண்டு பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post