வில்பத்து விவகாரம் சம்மந்தமாக மேற்குறித்த விடயம் பற்றி நாளேடுகளிலும் முகநூல்களிலும் பல் வேறுபட்ட கருத்துக்களை சிலர் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வில்பத்து என்பது மோதரகம(உப்பாறு)ஆற்றிற்கும் காளாவி ஆற்றிற்கும் இடைப்பட்ட 37Km. தூரமுடைய அரச தேசிய நந்தவனமாகும். இது அநுராதபுர மாவட்டத்திற்கு சொந்தமானது என்பதை தெளிவு படுத்துகின்றேன்.இதற்குள் எவ்வித காணி சுவீகரிப்புகளையோ வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற திட்டங்களையோ அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் மேற்கொள்ளவில்லை என மிகத்தெளிவாக எடுத்துக் கூறுகின்றேன்.
அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் முசலிப் பிரதேச நாலாம் கட்டை தொடக்கம் மறிச்சுக்கட்டி வரைக்குமான அப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களின் சொந்தக்காணிகளிலும் அரச அங்கீகாரம் பெற்ற காணிகளிலும் பரம்பரையாக வாழ்ந்த இடங்களிலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களையே மீள் குடியேற்றம் செய்துள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
இந்நிலையில் கடந்த 23.02.2017ம் திகதி அரச வர்த்தமாணியில் (மாவில்லு பேணர்க்காடு) என்ற தலைப்பில் அரச வர்த்தமாணியில் 47.235 ஹெக்டயர் காணியை இலங்கை சனநாயக குடியரசத்தலைவர் மேதக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன பிரகடனம் செய்துள்ளார். இது மன்னார் மாவட்டத்தின் முசலிப்பிரதேச மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்த விவசாய காணிகளும் மேட்டு நிலங்களுமாகும்.
இவ்வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து இப்பிரதேச மக்கள் 47 நாட்கள் தங்களது வாழ்விடங்களையும் விவசாய நிலங்களையும் மேட்டு நிலங்களையும் மீட்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இவ்விடயம் சம்மந்தமான தீர்வினை பற்றி ஆராய்வதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் கெளரவ அமைச்சர்களான றிஷாட் பதியுதீன் அவர்களையும் பைசர் முஸ்த்பா அவர்களையும் அனுப்பிவைத்திருந்தார்கள்.
இக்குழுவில் பா.உ காதர்மஸ்தான் அவர்களும் பா.உ அஸாத்சாலி அவர்களும் இன்னும்பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தார்கள்.
இது விடயமா இக்குழுவினர் ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்காக திகதியொன்றையும் பெற்றுத்தந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இக்குழுவினரும் முசலிப்பிரதேச முக்கியஸ்த்தர்களும்
அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தோம். ஜனாதிபதி அவர்கள் எமது தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்டு இவ்விடயம் சம்மந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பபற்காக 3 துறை சார்ந்த நிபுணர்களை அனுப்பி வைத்தார்கள். அந்நவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து முழுமையான ஆய்வினை மேற்கொண்டார்கள். அவ்வறிக்கைகள் தயாரிக்கப்ட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சிலர் மூக்கை நுழைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடுகின்றார்கள்.
முசலிப்பிரதேச மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கடின உழைப்பும் தியாக சிந்தனையும் எமது மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. எனவே இவ்விடயத்தில் தொடர்ந்தும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களும் முசலிப்பிரதேச நலன்விரும்பிகளும் தீவிரமாக செயற்படுவார்கள் என்பது திண்ணமாகும் எனவே இவ்விடயத்தில் குழப்பியடித்து குளிர்காய வேண்டாமென்று அன்பாக வேண்டுகின்றேன்.
“எமது இலட்சியம் எமது மண்ணை மீட்பதே வாழ்க றிஷாட் பதியுதீன்
வளர்க அவர்பணி “.