முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களால் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தீர்வு காணும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் , மக்கள் தற்காலிகமாக வசிக்கும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அவர்களுக்கான குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் நீர் தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.