Breaking
Mon. Dec 23rd, 2024

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

ஆந்­திர மாநிலம் திருப்­ப­தியைச் சேர்ந்­தவர் கரு­ணா­கரன் (45). இவ­ரது மனைவி மோகனா (38). இவர்கள் தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ருடன் காஞ்­சி­புரம் வந்­துள்­ளனர்.

இவர்கள் அண்­மையில் காஞ்­சி­பு­ரத்­தி­லி­ருந்து பெங்­களூர் செல்­வ­தற்கு முச்­சக்­க­ர­வண்­டியில் அரக்­கோணம் ரயில் நிலையம் சென்­றுள்­ளனர்.

வழியில் மஞ்­சம்­பாடி ரயில்வே கேட் அருகே முச்­சக்­க­ர­வண்டி செல்­லும்­போது மோக­னாவின் தலை­முடி வெளியே பறந்து பக்­கத்தில் சென்ற லொறியின் முன்­பக்கக் கதவில் சிக்­கி­யுள்­ளது.

இதனால்,  மோகனா முச்­சக்­க­ர­வண்­டி­யி­லி­ருந்து இழுத்து வெளியே வீசப்­பட்டு லொறியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

By

Related Post