Breaking
Sun. Mar 16th, 2025

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான வயதெல்லையை 23ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்புத் தொடர்பிலான அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அகில இலங்கை முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டீ.ஆர்.ஆர்.பள்ளி இதனை முன்வைத்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென ஒரு குழுவினை நியமிக்குமாறு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

By

Related Post