Breaking
Mon. Dec 23rd, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் சொர்க்கபுரியாக இருந்து வந்த இலங்கை தற்போது முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்மட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில், மீண்டும் குறுகிய காலத்தில் உலகில் பிரபலமாகியுள்ளது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தலைமைத்துவத்தை வழங்கும் நாடாக இலங்கை உலகில் பிரபலமடைந்துள்ளது.

ஜீ.7 மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை மற்றும் அதன் வெற்றி உலகத்திற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post