புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நேற்று முன்தினம் (15) கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார்.
இதன்போது முதலைப்பள்ளி “தாருல் உலூம் கஸீஸுல் ஹுதா” மத்ராஸா மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விற்கான வசதிகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.
அத்தோடு தொண்ணூறு ஏக்கர் பெரிய பள்ளிவாயல் மத்ரஸா பிரச்சினைகளையும் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அப்பகுதி மைய்யவாடிக்கு சுற்றுமதில் அமைப்பதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.