Breaking
Tue. Dec 24th, 2024

– பி.எம்.எம்.ஏ.காதர் –

கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்..

இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் கல்முனை கல்வி வலயம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் இம்முறை அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி(தேசிய பாடசாலை)மாணவன் மதுரா கிருஸ்ண சைதன்னியன் 189 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தையும்,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் எம்ஆர்.முகம்மட் மரீஸ் 186 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தையும்,காரைதீவு ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை மாணவி ரமேஸ் குமார் கஜினி 185 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளாதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மேலும் தெரிவித்தார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் சித்தி பெற்ற ஏனைய மாணவர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்; பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

By

Related Post