அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான காபா ஆலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் புனித உம்ரா பயணத்திற்காக செல்கிறார்கள்.
அவ்வாறு செல்லக்கூடிய மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உம்ரா செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் நான்கு சக்கர புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தில் அமர்ந்த படியே புனித உம்ரா கடமையை நிறைவு செய்யலாம்,
புதிய வாகனத்தை மக்காவின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸி அவர்கள் ஓட்டி பார்த்து துவக்கி வைத்துள்ளார்கள்.
சவூதிக்கு ஹஜ் ,உம்ரா கடமைகளை நிறைவேற்ற வரும் வலது குறைந்த, நடக்க முடியாத வயோதிபர்களின் நலனை கருத்தில் கொண்டு சவூதி அரசு நான்கு ரோதைகள் கொண்ட ஸ்கூடரை அறிமுப்படுத்தியுள்ளது.
ஹஜ் உம்ரா செல்லும் வயோதிபர்கள் இதனைப் பயன்படுத்தி தமது கடமைகளை இலகுவாக செய்து கொள்ள முடியும் என சவூதி அரசு தெரிவித்துள்ளது .