Breaking
Fri. Jan 10th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசர் ஆகியோரினால் துவிச்சக்கர வண்டி, தையல் இயந்திரம், நீர்பாசனத்திற்கான மோட்டார் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

Related Post