Breaking
Sun. Mar 16th, 2025

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

“கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.

திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர் நஜீப் அவர்கள் மிகவும் நேர்மையான மார்கப்பற்றுள்ள ஒரு அரசியல் தலைமையாவார். அவருடைய அரசியல் வாழ்வில் தான் பிரதிநிதித்துவப் படுத்திய மாவட்ட மக்களுக்காக இனமத பேதங்களுக்கப்பால் சேவை புரிந்த ஒரு உன்னத தலைவருமாவார்.

தனக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களை அமானிதமாக கருதி செயல்பட்ட நண்பர் நஜீப் அவர்கள் எப்போதும் சமூகம் பற்றி அதிகமதிகம் சிந்திக்கும் ஒருவராகவும் இருந்தார்

அன்னார் நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.அன்னாரது இழப்பால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ள குடும்ப உறவுகளுக்கு எனதும் குடும்பத்தாரதும் கவலையைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

Related Post