இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார்.
இலங்கை கடற்படையினர் கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்த விடயத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவர் சமர்ப்பித்த கட்டுரை பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஜயநாத் கொலம்பகே கடற்படையின் தளபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தது மாத்திரமன்றி,
இவரது காலத்தில் மஹிந்தவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் கடற்படைத்தளபதியின் அலுவல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.