Breaking
Mon. Dec 23rd, 2024
முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக்க திஸாநாயக்கவை இன்று பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

ரக்னா லங்கா ஆயுதக்கப்பல் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுதக்கப்பல் தொடர்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சோமதிலக்க அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post