Breaking
Sun. Nov 17th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா இதனை செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை.

இது தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நோக்கிலே அவர்கள் ஆணைக்குழுவிடம் முன்னிலையாகியுள்ளனர்.

இதேவேளை, பாரிய நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் நியமனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சட்டத்தரணிகள் முன்வைத்த எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன் எடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆணைக்குழு ஒன்றுக்கு அதிகாரிகளாக மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தற்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் நேற்றைய தினம் அடிப்படை எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேற்று முற்பகல் ரத்து செய்யப்பட்டு இன்று முற்பகல் மீண்டும் ஆரம்பமாகின.

By

Related Post