கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கே நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது, பொதுசொத்துக்களை நாசம் செய்தமை போன்றவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, இந்த ஒன்பது பேருக்கும் எதிராக பெவ்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம், அந்த ஒன்பது பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், ரோஹினி மாரசிங்க மற்றும் பியசாத் டெப் ஆகிய மூன்று நீதியசரசர்கள் கொண்ட குழாமத்தினால் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.