நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டிய லில் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மா னித்துள்ளதாக ஆங்கில ஊடகம்
ஒன்று செய்தி வெளியிட்டுள் ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்ல விரும்பினால், அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார்.
நாட்டுக்காக சேவையாற்றிய புலமையாளர்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கே, தேசியப்பட்டியல் முறை கொண்டு வரப்பட்டது என்பதையும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்காத புலமையாளர்களை தேசியப்பட்டியலில் உள்ளடக்குவது குறித்த கலந்துரையாடல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.