Breaking
Mon. Nov 18th, 2024

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சம சமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார்.

பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிக முக்கிய அமைச்சுக்களான பெருந் தோட்டத்துறை, பொது நிர்வாகம் ஆகியவற்றை இவர் பொறுபபேற்றிருந்த காலங்கட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களினதும், அரச சேவையாளர்களினதும் நலன்களுக்காக காத்திரமான திட்டங்களை முன்னெடுத்தவர்.

ஐக்கிய இராச்சியத்தில் இவர் கற்கின்ற காலத்தில் இலங்கை மாணவர்களின் தலைவராக பணியாற்றி இலங்கை தொடர்பில் பிறநாட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திளவர்.

காலஞ்சென்ற ரட்னஸ்ரீ விக்ரமநாயக பிரதமராக பதவியேற்ற காலத்தில் விவசாயிகளுக்கு அதியுச்ச நண்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பத்திரிகைத் துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அன்னார் ஊடகவியலாளர்களையும், கலைஞர்களையும், கலாவிற்பன்னர்களையும் தட்டிக்கொடுக்கக் கூடியவராக இருந்ததோடு அவர்களின் பணிகளைப் பாராட்டி கௌரவித்துமுள்ளார்.

அவரது வாரிசான விதுர விக்ரமராஜ நாயக தந்தையின் வழியில் இன்று அரசியல் நடத்தி வருகின்றார்.

காலம் சென்ற முன்னாள் பிரதமரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

 

By

Related Post