Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சமிந்த பெரேரா ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற அநுர சேனாநாயக்க தொடர்பில் 2003ஆம் ஆண்டு தொடக்கம் அறிக்கையிடுமாறும் நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கட்டளையிட்டுள்ளார்.

By

Related Post