முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களது கம்பெரேலிய திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெரியகடை நகரத்திற்கான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ரூபாய் 1.6 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு திறந்துவைக்கும் நிகழ்வானது மன்னார் நகர சபை வேற்பாளர் அன்டன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
மேலும் இந்நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நகுசீன் , உவைஸுல் ஹரிணி ,மற்றும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் கிராம சங்கங்கள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.