Breaking
Tue. Jan 14th, 2025

அ.இ.ம.காவில் தேர்தல் கேட்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமான பலம் கொண்டவர்கள். இதில் ஏனைய வேட்பாளர்களை விட மு.மா.ச.உறுப்பினர் ஜவாதிடமுள்ள பலம் என்னவென சிந்திக்கும் போது, மாகாண ரீதியான அதிகாரமொன்றில் இரு தடவை இருந்தவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மாத்திரமே!

இவர் 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியிருந்தார். 2012ம் ஆண்டு இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும், கட்சி மாறியதால் ஏற்பட்ட ஜெமீலின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். இது சாதாரண பலமல்ல.

இத் தேர்தலில் அ.இ.ம.காவில் வெற்றி பெற எதிர்பார்க்கப்படுபவருக்கு தேவையான பெரும் பலத்தில் இதுவுமொன்றாகும். அ.இ.ம.காவில் வெற்றி பெறுபவர் என எதிர்பார்க்ப்படுபவருக்கு 15 000 அளவான வாக்கெண்ணிக்கையே தேவைப்படும். தனது ஊரில் சிறிதளவும், வெளி ஊரில் சிறிதளவுமான வாக்கெண்ணிக்கையை பெறும் ஒருவர் மிக இலகுவாக வெற்றியீட்ட முடியும்.

இவர் மாகாண ரீதியான அதிகாரத்தை இரு தடவைகள் கொண்டிருந்ததால், ஒரு குறித்தளவு அம்பாறை மாவட்டத்திலுள்ள வெளியூர் வாக்குகளை தன் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவராக இருப்பார் என்பதை எவ்வித சந்தேகங்களுமின்றி குறிப்பிட முடியும். இதன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு வெளியூர் வாக்கு கிடைக்காது என கூற வரவில்லை. இவருக்கு ஒரு குறித்தளவு வெளியூர் வாக்குகள் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

மாகாண ரீதியான அதிகாரமானது, மாகாண ரீதியான மக்கள் செல்வாக்கை அதிகரிக்க கூடியது. அதிகாரம் இருப்பவரை மக்கள் அணுகுவது வழமை. இவரும் மக்களை அரவணைத்து செல்லும் பண்புடையவர். இவர் அதிகாரத்தில் இருந்த வேளை பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் போன்ற பிரச்சினைகளுக்காக பொத்துவில் பிரதேச மக்கள் இவரையே அதிகம் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவர் 2008, 2012 மாகாண சபை தேர்தல்களில் பெருமளவான வெளியூர் வாக்குகளை பெற்றிருந்தார். இம் முறையும் இவருக்கு பெருமளவான வெளியூர் வாக்குகள் கிடைக்கக் கூடிய சாத்தியங்களுள்ளன. தற்போது மருதமுனை, நற்பட்டிமுனை, நாவிதன்வெளி, இறக்காமம், மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் இவரது ஊசலாட்டத்தை அதிகம் அவதானிக்க முடிகிறது. அட்டாளைச்சேனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இவருக்கான பரந்துபட்ட ஆதரவை காணக்கிடைக்கின்றது.

இவர் குறித்தளவு வெளியூர் வாக்குகளை பெறுவார் என்பதை கள நிலவரங்கள் கூறுகின்றன. அதுவே அவருடைய பலம். கல்முனை மக்கள் ஒரு குறித்தளவு எண்ணிக்கையான வாக்குகளை இவருக்கு அளித்தால், நிச்சயம் இவர் பாராளுமன்றத்தில் அம்பாறை மாவட்ட மக்களின் குரலாக இருப்பார்.

இதனை இம் முறை கல்முனை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். சிறிய வாக்கெண்ணிக்கையில் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதோடு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

Related Post