அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசப்பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த 59 குடும்பங்களுக்கு ரூபாய் 465 000.00/- பெறுமதியில் இலவசமான மின் இணைப்பு மானி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (2019.07.01) இடம்பெற்றது.
மின்னிணைப்பிற்கான காசோலைவழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக மன்னார் பிரதேச சபை முதல்வர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை முதல்வர் சந்தியோகு மற்றும் மீள்குடியேற்ற செயணி மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான், இளைஞர் சேவைகள் மன்ற வடமாகான பணிப்பாளர் முனவ்வர், மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நந்தன் மற்றும் இணைப்பாளர் சனூஸ் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.