மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை(21) வழங்கி வைத்துள்ளார்.
16 முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சுமார் 700 சிறுவர்களுக்கும் இவ்வாறு பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இச்சிறுவர்களின் கற்றல் நடவடிக்கையினை விருத்தி செய்யும் முகமாகவும்,சிறுவர்களின் ஆரோக்கியமான செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாகவே குறித்த பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
இதே வேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல கிராமங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.குறிப்பாக வீதி,மின்சாரம்,குடிநீர்,போக்குவரத்து போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றது.
இது தொடர்பாக பாதீக்கப்பட்ட மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.எனவே அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்பன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்கள் வழங்கும் நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ்,கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் எம்.சுபைர்,மடு பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.விஸ்வராஜா,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.