Breaking
Mon. Dec 23rd, 2024

-திருமலை அரசாங்க அதிபர் தெரிவிப்பு-

2015 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.

முன்பள்ளி மாணவர்களின் கல்வி தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியைகள் முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்வது இன்றிமையாயதது என்றும் நாட்டின் நாளைய தலைவர்களாக வரக்கூடிய இம்மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை பொறுப்புணர்வுடன் ஆசிரியைகள் வழங்க வேண்டும் என்றும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தேசிய சிறுவர் செயலகத்தினால் திருமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களும் இதன்போது குறித்த ஆசிரியைகளிடம் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபருடன் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜனும் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தர் தீபாணி அபேசேகரவும் முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்பள்ளி மாணவர்களும் கலந்து சிறப்பித்தாரகள்.

By

Related Post