Breaking
Mon. Mar 17th, 2025

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தலை முன்னிட்டு ,எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பரப்புரைகளை கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயவர்த்தன,படையினரின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Post