Breaking
Mon. Dec 23rd, 2024

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­துக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதானம் பெரும்­பான்மை சமூ­கத்­தினால் உரிமை கொண்­டாடப்படும் நிலையில் அதனைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்டு வந்த வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார்.

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்­ப­வரே இவ்­வாறு கிரி/ அதார ஆரம்ப பாட­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார்.

2016.08.24 ஆம் திக­தி­யிட்ட இட­மாற்றக் கடிதம் நேற்று திங்­கட்­கி­ழ­மையே அதி­பரைச் சென்­ற­டைந்­துள்­ளது. அதிபர் இடமாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளதை அறிந்த அக்­கி­ராம பெற்­றோர்கள் நேற்­றைய தினமே மாகாண கல்விப் பணிப்­பாளர் அலு­வ­ல­கத்­துக்குச் சென்று இட­மாற்­றத்தை ரத்துச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளார்கள்.

அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள இட­மாற்ற கடி­தத்தில் இட­மாற்­றத்­துக்­கான காரணம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உங்கள் பாட­சா­லையில் ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சினை கார­ண­மாக உட­ன­டி­யாக செயற்­படும் வகையில் மாகாண கல்வி பணிப்­பா­ளரின் அனு­ம­தியின் கீழ் கிரி/ அதார ஆரம்ப பாட­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளீர் என­பதை அறியத் தரு­கிறேன்” எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­பரின் இட­மாற்­றத்தை ரத்துச் செய்து கொள்­வ­தற்­காக பெற்­றோரும் பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கமும் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அர­சி­ய­ல­வா­தி­களின் ஒத்­து­ழைப்­பையும் கோரி­யுள்­ளனர்.

பாட­சா­லைக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதா­னத்தை பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் கையாள்­வ­தற்கு வச­தி­யா­கவே அதிபர் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விளை­யாட்டு மைதா­னத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக மும்­மு­ர­மாக செயற்­பட்டு வந்த அதி­பரை பழி வாங்­கு­வ­தற்­கா­க­வுமே இந்த இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்கம் தெரி­விக்­கி­றது.

கடந்த 38 வரு­டங்­க­ளாக இந்த பாட­சாலை மைதா­னத்தை மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­லயம் பயன்­ப­டுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இம் மைதா­னத்தை பெரும்­பான்மை மக்கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கு பாட­சாலை நிர்­வாகம் மறுப்புத் தெரி­வித்­த­தை­ய­டு­த்தே பிரச்­சினை உரு­வா­கி­யது.

இத­னை­ய­டுத்து அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களில் பொருட்கள் கொள்­வ­னவு செய்­வதைப் பகிஷ்­க­ரித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, பாட­சாலை விளை­யாட்டு மைதா­னத்தை மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் பாட­சாலை ஊழி­யர்­களும் பயன்­ப­டுத்­த­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு வலய கல்விக் காரி­யா­லயம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post