க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் இன்றுடன் (08) நிறைவடையவுள்ளது. பரீட்சை இறுதிநாளான இன்று பாடசாலைகளின் உள்ளேயும் வௌியேயும் ஒழுக்கத்தைப் பேணுமாறும் அவ்வாறு தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முறைதவறி நடக்கும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார். கடந்த வருடம் மாணவர்கள் முறைகேடாக நடந்தமையினால் இவ்வருடம் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பாடசாலை வளாகத்தினுல் முறைதவறி நடக்கும் மாணவர்களின் பெயர்விபரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர் மற்றும் பரீட்சை அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவித்துள்ள அதேவேளை, பாடசாலைக்கு வௌியே அவ்வாறு நடக்கும் மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.