முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன் இருந்த திமிங்கலத்தை கடலுக்கள் விடும் முயற்சியில் இறங்கினர்.
இந்த நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். இதற்காக கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.