Breaking
Fri. Jan 10th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில்  தையல் பயிற்சி நிலையமும், பகுதி நேர சிறிய ஆடை தொழிற்சாலையும் 
(மினி காமன்ட் ) அண்மையில் (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாந்தை மேற்கு, மவுலிக்குளம், நட்டாங்கண்டல், துணுக்காய், மல்லாவி ஆகிய கிராமங்களிலேயே தையல் பயிற்சி நிலையங்கள் மற்றும் பகுதிநேர ஆடைத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன.

அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்தது கொண்டார். சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் இணைப்பாளர் மபூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் SLITA நிறுவனத் தலைவர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

Related Post