2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (16) மதியம் 2.30 மணியளவில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீட்டு திட்டம், நீர்ப்பாசனம், யானை வேலி, வடிகாலமைப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி, கல்வி , சுகாதாரம், மீன்பிடி உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு, தீர்வுகளும் எட்டப்பட்டன.
குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.