Breaking
Wed. Nov 20th, 2024

முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் (MMCF) வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு கடந்த வாரம் புத்தளம், நிலாமல்டி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், காணிப் பிரச்சினைகள், வாக்காளர் பதிவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் அதேவேளை முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெற்றுக் கொள்ளுதல், எம்.எம்.ஸி.எப். இன் எதிர்கால நடவடிக்கைகள் முதலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது போரம் விடுத்த வேண்டுகோள்களை வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிர் ஏற்றுக் கொண்டார்.

இதில் முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்தின் தலைவர் ஏ.எல். ஹல்லாஜ், செயலாளர் ஜெம்ஸித் அஸீஸ், பொருளாளர் எம்.எம். சித்தீன், உப தலைவர் யு.எம். குத்தூஸ், உப செயலாளர் எம். றமீம் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related Post