Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

முள்ளிப்பொத்தானை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், நேற்று முன்தினம் (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில், கட்சி போராளிகளின் பங்குபற்றுதலோடு, முன்னாள் மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபின் காலத்திலிருந்து இற்றைவரை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்குவகித்த ஆதரவாளர்கள் மற்றும் இப்பிரதேச இளைஞர்களுமே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Post