Breaking
Thu. Jan 9th, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்  விளக்கமொன்றை   ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம் உள்ளிட்ட பல பாகங்களிலும் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.அதே போல் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த  முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.அதன் பிற்பாடு இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னர் இம் முஸ்லிம் மக்கள் தமது சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற வந்தனர்.அன்று 90 ஆம் ஆண்டு இங்கிருந்து வெளியேறிய குடும்பங்கள் 1425 என்று அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆன போதும்,கடந்த 20 வருடங்களுக்குள் இம்மக்களின் எண்ணிக்கை பல மடங்காக மாறிய நிலையில் இம்மக்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கு காணி வழங்க வேண்டிய தேவையேற்பட்டது.அப்போது அன்றிருந்த பிரதேச செயலாளர் தயானந்த அவர்களிடம் இம்மக்கள் விடுத்த வேண்டுகோளினையடுத்து பிரதேச செயலாளர் அவர்கள் ,அரசாங்க அதிபர் ஊடாக இம்மக்களுக்கு பொருத்தமான காணியினை அடையாளப்படுத்தும் பணியினை மேற்கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி அதிகாரிகள் இப்பகுதிக்கு பல முறை வருகைத்தந்து,இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு,வனபரிபாலனத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு –ஒட்டுச் சுட்டான் வீதியில் முள்ளியாவலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காணியினை உரிய முறையில் தேவையான அளவு விடுவிப்பு செய்யும் பணியினை செய்தனர்.
அதன் பிற்பாடு அந்த காணியினை துப்பரவு செய்ய மக்கள் சென்ற போது,சில இனவாதிகள் அதனை தடுத்து நிறுத்தினர்.இதனயைடுத்து வேறு சில இடங்களை இம் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்க அதிபர் வேதநாயகம் மற்றும் இரானுவம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.அதே போல் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட காணி விடயம் இழுபறி நிலைக்குள் ஆகிய நிலையிலேயே வேறு இடம் பெற்றுக் கொடுக்க தீர்மாணிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் சட்ட ரீதியாக வனபரிபாலன அதிகாரிகளினால் இந்த காணி விடுவிப்பு செய்யப்பட்டு மருதயன்பற்று பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து காணி கச்சேரி வைக்கப்பட்டு உரிய முறையில் குடும்பங்கள் தெரிவ செய்யப்பட்டு அதனை துப்பரவு செய்ய செல்லும் போது மீண்டும் இனவாதிகளின் அட்டூழியங்கள் மீண்டும் தலை துாக்க ஆரம்பித்துவிட்டன.
அரசாங்கத்துக்கு சொந்தமான காடுகளை கடந்த 30 வருட காலமாக அழித்தவர்கள யார் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.காடுகளை அழிப்பதற்கு எவரிடம் அனுமதியெடுத்தார்கள் என்பதையும் மக்களும் அதிகாரிகளும் நன்கறிவார்கள்.அன்று காடுகளை அழித்து எத்தனை கிராமங்களை உருவாக்கினார்கள் என்பதையும் முல்லை மக்கள் நன்கரிவார்கள்.அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அரசியல் தலைவர் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாத வங்குரோதத அரசியல் வாதிகள்,ஒற்றுமையினை விருமபம் தமிழ் மக்களுக்கு மத்தியில் சென்று முஸ்லிம்கள் பற்றி தப்பான கதைகளை புனைந்து மீண்டும் ஒரு இன முறுகலை தோற்றுவிக்க எடுக்கப்படும் மற்றுமொரு சதி முயற்சியாகவே அவ்வப்போது இனவாத அறிக்கைகளை வெளியிடடவருகின்றனர்.
பிரதேச அபிவிருத்தி குழு  என்ற வகையில் எமது அதிகார எல்லைக்குள்  காணிகள் எவருக்கும் வழங்கப்பட வேண்டுமெனில் அதற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் அங்கீகாரம் எடுக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவர்களுக்கான சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.
அதனை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கான பணிப்புரையினை வழங்கியுள்ளார்.இவ்வாறான முயற்சிகளை நாம் கொண்டுவருகின்ற போது,உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குபவர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கேட்டுள்ளார்.

 

Related Post