Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் இலங்கை பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் உலகவங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி நியமித்துள்ள இலங்கைக்கான புதிய பணிப்பாளர் கலாநிதி அய்டா ரிட்டிஹச், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

உலக வங்கி இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கையானது எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மிகவும் பக்கபலத்தை கொடுத்துள்ளது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளார்.

இதனிடையே இலங்கையின் திட்டமிடல் நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக உலக வங்கி மேலும் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.

இது சம்பந்தமான உடன்படிக்கை நிதியமைச்சில் கையெழுத்திடப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த கடனுதவியின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

By

Related Post