Breaking
Mon. Nov 18th, 2024

புதிய பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தமக்கு வரும் கேள்­வி­க­ளு க்கு பதில் அளிக்கும் வகையில் கட்­டா யம் பாரா­ளு­மன்ற ஆச­னத்தில் அமர்ந்­தி­ரு க்க வேண்டும்.

இதற்­கான விசேட கட்­ட­மைப்­பினை நாம் கொண்டு வர­வுள்ளோம். இதன்­ பி­ர­காரம் அமைச்­சர்­க­ளுக்­கான வெளிநாட்டு பய­ணங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
மோதிக் கொண்­டி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன.

இது நாட் டின் வர­லாற்று புரட்­சி­யாகும். மேலும் நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடனும் இணைந்து செயற்­பட தயா­ராக உள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்கள் பத­வி­யேற்பு நிகழ்வின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தேசிய அர­சாங்கம் அமைப்­பதின் முத­லா­வது கட்டம் நிறைவு பெற்­றுள்­ளது. கடந்த நான்காம் திகதி அமைச்­ச­ரவை பொறு­பேற்­றது. இதற்­க­மைய நேற்­றைய தினம் அமை ச்­ச­ர­வையின் முத­லா­வது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­னது.

நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது வாதபிர­தி­வா­தங்­களை மறந்து முட்டி மோதிக் கொண்­டி­ருந்­த­வர் கள் தற்­போது ஒன்­றி­ணைந்­துள்­ளனர். இது வர­லாற்று அர­சியல் புரட்­சி­யாகும்.

இதுவே புதிய அர­சியல் கலா­சா­ர­மாகும். நாட்டின் இரண்டு பிர­தான கட்­சிகள் ஒன்­றி­ணைந்­து நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய வகையில் தீர்­வினை எடுக்க முன்­வந்­துள்ளோம்.

அடுத்த இரண்டு வரு­டங்­களில் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி ­ணைந்­துள்­ளனர். இரண்டு கட்­சி­களும் தேர் ­தலின் போது நாட்டு மக்­க­ளுக்கு முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை அலசி ஆராய்ந்து அடுத்த கட்ட நகர்­வு­களை நாம் முன்­னெ­டுப்போம்.

நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் மக் கள் விடு­தலை முன்­ன­ணி­யு­டனும் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். இதற்­க­மைய முழு பாரா­ளு­மன்­றத்தையும் நாம் அர­சாங்­க­மாக மாற்­ற­வுள்ளோம்.

அத்­தோடு 60 மாதங்­களில் புதிய பாரா­ளு­மன்­றத்தை நாம் உரு­வாக்­க­வுள்ளோம். கேள்வி நேரங்­களின் போது அமைச்­சர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அமர்­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வுள்ளோம்.

புதிய பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தமக்கு வரும் கேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்கும் வகையில் கட்­டாயம் பாரா­ளு­மன்ற ஆச­னத்தில் அம­ர்ந்­தி­ருக்க வேண்டும்.

அவ்­வா­றான கட்டமைப்பினை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.
இதன்பிரகாரம் அமைச்சர்களுக்கான வெளிநாட்டு பயணங்களையும் மட்டுப் படுத்தவுள்ளோம்.

தேவையற்ற வெளி நாட்டு பயணங்களை குறைக்க வேண்டியு ள்ளது. அதற்கு பதிலாக நாட்டு மக்கள் எங் களிடம் ஒப்படைத்த பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Related Post