Breaking
Mon. Dec 23rd, 2024

அஷ்ரப் அவர்களுக்கு தீகவாபி என்றால், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு மரிச்சுக்கட்டி எனலாம்.

அன்று TNL சோம ஹிமியை வைத்து அஷ்ரப்புக்கு ஆப்படிக்க நினைத்த போது அவர் காலை வாற ஒரு பௌசி!

ஆனால் இன்று ஒட்டுமொத்த மீடியாவும் இனவாதிகளோடு ஓரணியாக திரள,
“அண்ணன் எப்ப சாவான்? திண்ண எப்போ காலியாகும்னு ?” ஏங்கும் போராளிகளின் ஓலம் பேஸ்புக்கெங்கிலும் ஈனஸ்வரமாக கேட்கிறது.

ஓகே !
நேற்றிரவு நடந்த 360 நிகழ்ச்சியை கொஞ்சம் அலசுவோம்!

‘சங்க’ (සංඛ)என்ற பிறவியால் நடாத்தப்பட்ட மேற்கூறிய நிகழ்ச்சியில், ரிசாத் என்ற ஆளுமையை அடித்து நொருக்குவதில் ‘முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கே கேடு’ என்ற தோற்றத்தை உருவாக்குவதே இவன்(இவர்கள்) நோக்கமாக இருந்தது.

ஆதாரமாக காட்டப்பட்ட எல்லாத்தையும் ‘வெற்றுப்பேப்பர்’ என்ற தோரணையில் அலட்சியப்படுத்தினான், அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.

மரிச்சுக்கட்டி மக்களின் உரிமையை நிரூபிக்க முயன்ற அத்தனை முயற்சிகளையும் கண்டு கொள்ளாதது போல பாவ்லா செய்து, நமுட்டுச் சிரிப்பால் கேலி செய்ததை கடைசிவரை அவதானித்திருப்பீர்கள். கோபத்தோடு வரும் கதாநாயன் மீது ஏலனமா சிரித்து அவனை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் தமிழ்ப்பட வில்லத்தனம் இது!

ரிசாத் இறுக்கமான முகத்தோடு தம் மக்களை மனதில் கொண்டவராக சத்தியத்தை நிறுவ கடைசிவரை பாடுபட்டார்.

ஆனால் அதனை சிங்கள மக்களிடம் ‘வெறும் நடிப்புடா சாமி ‘ என்று சங்க மொழிபெயர்ப்பு செய்து வெற்றியும் கண்டது கண்கூடு !

விவாதங்களில் சத்தியத்தை விட லாஜிக் தூக்கலாக இருக்க வேண்டும் அதுவும் தெரண, ஹிரு போன்ற சேனல்களின் நிகழ்ச்சி நடத்துபர்களை பூச்சி புழுக்களை பார்ப்பது போல பார்க்க வேண்டும். அவர்களை அடிக்கடி அத்துமீற வேண்டும்.

‘நீங்களும் நல்ல சட்டத்தரணி தானே?’என்று சங்கவை கேட்பதை விடுத்து ‘நீயெல்லாம் ஒரு லாயரா?’ என்ற அமைப்பில் அவர்களை மட்டம்தட்ட வேண்டும்.

ரிசாத் பதியுத்தீன் கடைசி வரை இறுக்கமான முகத்தோடு மாத்திரமன்றி கொஞ்சம் பதைபதைப்பாக இருந்ததை அவதானித்திருப்பீர்கள்.

தங்கக்கடத்தலில் தனது தம்பியை இணைத்து பேசிய போது அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி சங்கவை அடித்திருக்கலாம்.

(தலைவரோடு துணைக்கு தெரண லாபி வரை சென்று, ‘கெத்தா செல்பி’ பிடித்தவர்கள் தமது தலைவரை எந்தளவு அறிவூட்டினார்களோ?)

அன்று ‘TNL இல் அஷ்ரபை வீழ்த்தினால் முஸ்லிம்களை மடக்கலாம்’ என்று போட்ட அதே திட்டம் அப்துல் ராசிக், ரிசாத் பதியுத்தீன் என்று நீண்டுகொண்டே போவதை அறியாமல் கட்சி, இயக்க கண்ணாடி போட்டு ரசிப்பது அறியாமையின் உச்சம்.

தேசிய பிரச்சினைகளுக்கு கட்சி சாயம் பூசி ‘எமது விரல்களால் எமது கண்களை நாமே குருடாக்கும்’ மூடத்தனத்தை விடுவோம்.

அமைச்சர் அவர்கள் ‘சகுனிகளின்’ நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது கொஞ்சம், இல்லையில்லை நிறைய ஹோம்வர்க் செய்து
செல்ல வேண்டும் அதனை செய்விப்பவர்கள்தான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்!

“வாய்மையே வெல்லும்”

By

Related Post