Breaking
Tue. Nov 26th, 2024

நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்து கூர­க­லவில் பள்­ளி­வா­சலை அமைத்­த­வர்­களை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்தும் பொதுபல சேனா பெளத்த குருமார் மீதான தாக்­கு­தலை கண்­டிப்­ப­தோடு இப் பிரச்­சினை தொடர்­பாக அரசு நியா­யத்தை பெற்றுக் கொடுக்க தவ­றி­விட்­ட­தா­கவும் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக பொதுபல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தகவல் தரு­கையில்,

கூர­கல பிர­தேசம் 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க பெளத்த சின்­னங்கள் காணப்­பட்ட இட­மாகும்.இதனை தொல்­பொ­ருள் திணைக்­களம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தோடு அங்­கீ­க­ரித்­துள்­ளது.

அங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பள்­ளி­வாசல் கட்­டப்­பட்டிருக்கலாம். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.ஏனென்றால் ஆங்கிலேயர் காலத்தில் தொல் பொரு­ள் ஆராய்ச்சி சட்­டங்கள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.இப்­பி­ரச்­சினை தொடர்­பாக நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­தோடு கூர­க­ல­வி­லி­ருந்து பள்­ளி­வா­சலை அகற்றி வேறொரு இடத்தில் அமைப்­ப­தற்­கான தீர்வை நீதி­மன்றம் வழங்­கி­யது.

அதற்­கான மாற்­றுக்­கா­ணியும் வழங்­கப்­பட்­டது.ஆனால் இத்­தீர்ப்பை மீறி கூர­க­லவில் பள்­ளி­வாசல் கட்­டப்­பட்­டுள்­ளது.

இது நீதி­மன்­றத்­தீர்ப்பை அவ­ம­திக்கும் செய­லாகும். ஆகவே மதிப்­பு­மிக்க இவ்­வி­ட­த்தை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

தொல்­பொ­ரு­ள் ஆராய்ச்சி சட்­டங்­க­ளையும், நீதி­மன்றத் தீர்ப்­பையும் மீறி முஸ்லிம் பள்­ளி­வாசல் கட்­டப்­பட்­டுள்­ளது.எனவே இதனை நிர்­மா­ணித்­த­வர்­களை கைது செய்ய வேண்டும்.
அதை­வி­டுத்து தேசிய உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுத்த பெளத்த குருமார் மீது பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இதனை கடு­மை­யாக கண்டிக்கின்றோம்.

அரசாங்கம் இவ்விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடித்துள்ளது.எனவே இவ்விடயத்தில் அரசு தலை யிட்டு நியாயத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

Related Post