அண்மையில் இங்கிலாந்தில் இந்திய பிரதமர் மோடி கூறிய ஒரு உண்மையை உரக்கக் கூறியுள்ளார்.
ஆம், ராஜஸ்தானில் உள்ள ஒரு முஸ்லிம் ஆசிரியரின் பெயரை கூறி, இவர் போன்றவர்களால்தான் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆம், ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் முஹம்மது இம்ரான் என்பவர்தான் மோடியால் பாராட்டபட்ட ஆசிரியர்.
முஹம்மது இம்ரான் ஆசிரியர் 2012 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் 50 க்கும் அதிகமான மொபைல் அப்ளிகேஷன்களை கண்டுபிடித்ததோடு நில்லாமல் அதை காசக மாற்றி தன்னை வளர்த்து கொள்ள முயலாமல் அந்த அப்ளிகேஷன்களை மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கிவிட்டார்.
இம்ரானின் இந்த செயலை பாராட்டிய மோடி இம்ரான் போன்றவர்களால் தான் இந்தியா வளர்கிறது என்று புகழ்ந்திருக்கிறார். அண்மைய காலங்களில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிரான அசம்பாவிதங்கள் கட்டவிழ்த்துப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,