Breaking
Fri. Nov 22nd, 2024

பல தசாப்த கால­மாக இலங்­கையில் புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கி­றது.

அதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்லிம் மக்­களின் அபி­லா­சை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

இதனை இந்­தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத் தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான றிஷாத் பதி­யுதீன் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மாவை கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் சந்­தித்து இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் அபி­லா­சைகள் குறித்து கலந்­து­ரை­யா­டினார்.

பின்பு அவர், நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கலந்து ரையாடல் குறித்து விப­ரிக்­கையில்;
வடக்கு கிழக்கில் கடந்த காலங்­களில் நிலவி வந்த தமிழ், முஸ்லிம் நல்­லு­றவும் சகோ­தர மனப்­பான்­மையும் ஆயுதப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டதன் பின்பு விரி­ச­ல­டையத் தொடங்கி பல பிரச்­சி­னைகள் இரு இனங்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­டன.

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு சமா­தானம் உரு­வா­னதன் பின்பு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் மீண்டும் நல்­லு­ற­வுடன் இணைந்து வாழ்­வ­தற்­கான சூழலை உரு­வாக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் முரண்­ப­டாத வகை­யிலும் எந்­த­வொரு இனத்­தையும் பாதிக்­காத வகை­யிலும் உரு­வாகும் தீர்­வையே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆத­ரிக்கும் என்­பதை உறு­தி­யாக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் தெரி­வித்தேன்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு காத்­தி­ர­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அடங்­க­லாக ஏனைய தமிழ்க் கட்­சி­களும் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் தமக்குள் பரஸ்­பரம் கலந்து பேசி ஒரு பொது­வான உடன்­பாட்டை எட்­டிய பின்­னரே இறுதித் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­பது பொருத்­த­மாகும்.

அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம், தேர்தல் முறையில் மாற்­றங்கள், இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தரத் தீர்வு போன்ற விட­யங்­களை முன்­னெ­டுக்­கும்­போது பெரும்­பான்மை இனத்தை திருப்­திப்­ப­டுத்தக் கூடிய வகையில் மட்டும் அவை அமை­யாது சிறு­பான்மைச் சமூ­கத்தின் நலன்­களைப் பேணும் வகை­யிலும் அந்த முன்­னெ­டுப்­புகள் இருக்க வேண்­டு­மெ­னவும் அதுவே நடை­முறைச் சாத்­தி­ய­மாக அமை­யு­மெ­னவும் எடுத்து விளக்­கினேன்.

கடந்த காலங்­களில் இலங்­கையின் அபி­வி­ருத்தி, மீள் குடி­யேற்றம் மற்றும் வீட­மைப்புத் திட்­டங்­களில் இந்தியா ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்கு நன்றிகளைத் தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு– கிழக்கு மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவுமென தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்

By

Related Post