Breaking
Mon. Dec 23rd, 2024
கொழும்பு நகர் கல்வி வலயத்திற்குள்ளே வைத்தியர்கள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் உருவாக்கத்தின் தேவையை விட ஆசிரியர்களை உருவாக்குவது அத்தியவசியமாக மாறியிருக்கின்றது. இதனை நாம் செய்யாவிடின் எமது சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்தார்.

கொம்பனி தெரு மதரஸா ஒன்றின் வருடாந்த மீலாத் தின நிகழ்வு (29) இரவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வில் சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பதக்கங்களும் அனுவிக்கபட்டது. இம்மாணவர்கள் எமது சமூகத்திற்கு தேவையுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
எமக்கு பெரும் சவால்கள் இருக்கின்றன. அண்மையில் முஸ்லிம் சமய விவகாரம், தபால், தபால் சேவைகள் அமைச்சர் ஹலீமினால் எனது வேண்டுகோளுக்கிணக்க கொழும்பை சேர்ந்த 25 பேருக்கு அவரது அமைச்சுக்களில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதற்காக என்னிடம் 25 பேரின் பெயர் பட்டியலை கேட்டார். அந்தவகையில் நானும் 25 இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்களை அனுப்பி வைத்தேன். பின்னர் அவர்களின் தகைமைகள் ஆராயப்பட்டு 3 பேர் மாத்திரதே தகுதியுள்ளவர்களாக இருந்தனர். இவ்வாறு வேலை வாய்ப்பில் இணைந்துகொள்ள ஆகக் குறைந்த தகைமையான சாதாரண தரத்தில் 2 திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்களை தேடிப் படிப்பது கடிணமாக இருக்கின்றது.

கொழும்பிலே 70 வீதமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கல்வித் தகைமைகள் இல்லாமல் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் பாடசாலைகளில் உள்ள சில குறைப்பாடுகளாகும். இவற்றை நிவர்த்திசெய்ய எதிர்க்காலத்தில் நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுங்கவுள்ளோம். அதற்கு கொழும்பு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. மக்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்.

கொழும்பு நகருக்குள்தான் நாட்டிலுள்ள முன்னணி பாடசாலைகள் காணப்படுகின்றன. அந்த  பிரபல தேசிய பாடசாலைகளில் எமது பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பதில்லை. வெளி மாணவர்களேயே அவற்றில் கற்கின்றனர். எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் சிறந்த தரத்தில் இருப்பதாக அவதானிக்க முடியவில்லை. இந்நிலையில் சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இதனால் எமது மாணவர்கள் இங்குள்ள மாகாண பாடசாலைகளிலேயே கற்றவேண்டிய நிலை காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கொழும்பு நகருக்குள் கற்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கொழும்புக்கு வெ ளியிலிருந்தே அழைத்தெடுக்க வேண்டியிருக்கின்றது. அவர்கள் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஓரிரு வருடங்கள் இங்கு கடமையாற்றிவிட்டு பின்னர் அரசியல்வாதிகளை பிடித்துக்கொண்டு சொந்த இங்களுக்கு சென்று விடுகின்றனர். அத்துடன் எமது பாடசாலைகளிலுள்ள சிங்கள மொழி பிரிவுகளில் கற்பிக்க சிங்கள ஆசிரியர்கள் வருவதில்லை. அவர்களுக்கும் நடைமுறையில் பல சிக்கல் இருப்பதனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வருவதற்கு அவர்களும் விரும்புவதில்லை. இதனால் இங்கு பாரியளவில் ஆசிரியர் தட்டுப்பாடொன்று காணப்படுகின்றது.

நாங்கள் வெளி பிரதேச ஆசிரியர்களை இனிமேலும் நம்பியிருக்க முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறு நம்பியதனால் பாரியளவில் கல்வி தகைமையற்ற சந்ததியொன்றை உருவாகியுள்ளது. இனிமேலும் எதிர்கால சந்ததியினரையும் எம்மால் பலிக்கடாக்கலாக்க முடியாது. அவர்கள் காப்பாற்றப்படவேண்டும். எமக்கு இன்று வைத்தியர்களே சட்டத்தரணிகளே பொறியிலாளர்களே தேவையில்லை. ஆசிரியர்களே தேவை. அவற்றை நாமே உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்றார்.

By

Related Post