Breaking
Mon. Dec 23rd, 2024

உலமாக்கள், இஸ்லாமிய சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமேயொழிய, எழுந்தமானதாகவோ, சர்வதேச நியமங்களுக்கு இயைந்தவாறோ எவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதென்று மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யக் கூடாதென ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை, தனிப்பட்ட முறையிலே தான் வரவேற்கின்றபோதும், எந்தவொரு ஆர்ப்பாட்டமும், கவனயீர்ப்புப் போராட்டமும் இஸ்லாமிய வரையறைக்குள், எவரையும் புண்படுத்தாது அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் மாற்று மதத்தினரை தேவையற்ற முறையில் விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்வதுடன், நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்த அண்மைய ஆர்ப்பாட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

           

By

Related Post