-பாறுக் ஷிஹான்-
யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஐயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அக்கிராமத்தில் மீள் குடியேறிய , மக்களிடம் சென்று கலந்துரையாடினார்
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12) ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்வதற்காக அங்கு சென்றார்.
இவ்விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கையில்
பரச்சேரி பிரதேச காணிகளில் மீண்டும் முஸ்லீம்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை சில தரப்புகள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அறிந்தேன். கடந்த காலங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம்கள் ஏற்கனவே குடியேறி வாழ்ந்த பிரதேமாக பரச்சேரி பிரதேசம் உள்ளது.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர தற்போது விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஆனால் அவ்விடத்தில் விவசாய செய்யும் காணி என கூறி விவசாய அமைப்புகள் அது சார்ந்த சம்மேளனங்கள் மக்களை மீளக்குடியேற விடாமல் தடுத்து வருகின்றன.
ஆனால் கள் தவரணைக்கு அனுமதி வழங்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவே மக்களையும் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று பார்வையிட்டேன். மக்கள் பக்கம் தான் நியாயமான காரணங்கள் உள்ளன.அதனை அடுத்து இக்காணி மீளவும் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு நான் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடியுள்ளேன் என கூறினார்.