இலங்கை முஸ்லிம்களின் விமோசனம் எனது உயிரிலும் மேலானது. இந்த சமூகத்தின் நலன்கருதி எந்த பெரிய பதவிகளை தூக்கி வீசவும், சமூகத்துடன் இரண்டர கலந்து போராடங்களை முன்னெடுக்கவும் நான் தயார் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா அல்லது மைத்திரியா என்று நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதான் உண்மை நிலவரமாகும். இரு பக்கத்திலும் கடும் போக்காளர்கள் உள்ளனர். இதனால் தீர்மானம் மேற்கொள்வது சிரமமானது.
எமது இறுதித் தீர்மானத்தில் தாமதம் ஏற்படலாம். இந்த தாமதமானது மக்களின் விருப்பத்தை அறிவதற்கான காலப்பகுதியாகவே நாம் நோக்குகிறோம். அந்தவகையில் முஸ்லிம்களின் நலனை முன்நிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற தீர்மானத்தை மேற்கொள்வோமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.