Breaking
Mon. Dec 23rd, 2024

மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார்.

‘கடந்த ஆட்சியின் போது பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாக அவ்வரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்பு கொண்டிருந்தனர்.

அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தனர்’ எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர், கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரை திங்கட்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நான் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதியாக செயற்பட்டதில்லை.

எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் அதில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவர்களின் தராதரம் பாராமல் குற்றச்செயல்களுக்கு தண்டணை வழங்க வேண்டும்’ என்றார்.

‘இணையத்தள பாவனை நாட்டில் இளம் சமூதாயத்தை சீரழித்து வருகின்றது. அதுமட்டுமல்ல பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எதிர்க்;கட்சிகளின் பொறுப்பாகும்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post