Breaking
Mon. Dec 23rd, 2024
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன்  கிரியல்ல  அவர்கள் குறிப்பிட்டார்.
நேற்று மாலை கண்டி மடவளை பிரதேசத்தில் அமைச்சர் கிரியால்ல அவர்களின் பாததும்பரை ஹாரிஸ்பத்துவை தொகுதிகளுக்கான முஸ்லிம் இணைப்பு செயலாளராக நியமனம் பெற்ற மடவளை பஸார் அல்ஹாஜ் ஹனீப் அவர்களின் அனுசரணையில் தெரிவு செய்யபட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிழ்கவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் …
கடந்த ஆட்சியில் முஸ்லிம் மக்கள் மிகுந்த அச்சத்துடன் நேன்பு நோற்றனர்.கடந்த நேன்பை அண்மித்த  காலத்தில் அளுதகம பேருவளை வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன ஆனால இந்த முறை முஸ்லிம்கள் பாதுகாப்பாக நோன்பு நோற்கின்றனர்.அன்று வன்முறையில் இறங்கியவர்களை நான் வாய் வார்த்தைகளுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம்.
முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கிறார்கள் எமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை  கட்டவிழ்த்துவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன்  கிரியல்ல  அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் விக்கிரம திசாநாயக்க அமைச்சரின் முஸ்லிம் விவகார  செயலாளரும் தென்னை பயிர் செய்கை தலைவருமான ஹிதாயத் சத்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Post