Breaking
Sun. Sep 22nd, 2024
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் புத்திஜீவியாக இருந்தால், எமது கட்சியில் அவர்களுக்கு இடமுண்டு என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நாட்டில் 2500 வருட காலமாக பௌத்தர்களாக இருந்துகொண்டு, எமது உரிமைகளை புதையல் போன்று பாதுகாப்பதற்கு அறிஞர்களால் தான் முடிந்தது. இந்தப் பணிக்காக ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் புத்தஜீவி முன்வருவாராக இருந்தால் அவருக்கு எம்மிடத்தில் இடமுண்டு. எமது கட்சியில் பொது என்பது புத்திசாலிகளையே குறிப்பிடுகின்றது.

நாகப் பாம்பு எமது சின்னமாக நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். நாகம் என்பது பாளி மொழியில் புனிதமான என்று பொருள்படுகின்றது. ஏனெனில், அதன் சுபாவம் வீணாக எவருக்கும் அநியாயம் செய்வதில்லை. தனது எல்லைக்குள் இடைஞ்சல் செய்ய வந்தால் மாத்திரமே, அது தீண்டும். இதுபோலவே எமது அரசியலும்.

பிரித்தானியர்களை விட இன்று நாட்டில் பிரித்தாளுபவர்கள் உள்ளனர். இன்றுள்ள கறுப்பு வெள்ளையர்கள் இதனை சரியாக செய்து வருகின்றனர்.

இன்று கட்சிக்காக உயிரைக் கொடுப்பவர்கள் உள்ளனர். இவர்கள் மேடைப் பேச்சுக்களில் தூள்பறக்க கத்துவார்கள். ஆனால், நாட்டுக்காகவும், இனத்துக்காகவும் உயிரைக் கொடுப்பவர்கள் இல்லாதுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையுள்ள 10 வருட காலப்பகுதியில் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே நாம் அரசியலில் இறங்கியுள்ளோம்.

பாராளுமன்றத்தில் இன்றுள்ளவர்களில் நுாற்றுக்கு ஐம்பது வீதமானவர்கள் சாதாரண தரம் சித்தியடையாதவர்கள். ஏனையோர், வயது முதிர்ந்த சக்கரநாற்காலியில் செல்பவர்கள். இவர்களால் எப்படி நாட்டைப் பலப்படுத்த முடியும்.
நாட்டின் அபிவிருத்தி பற்றி அரசியல் மேடையில் பேசுகின்றார்கள். இது ஒரு பெரிய விடயமல்ல. நாட்டு மக்களின் வரிப் பணத்தை எடுத்துக் கொண்டு அபிவிருத்தி செய்வது சாதாரண விடயம். வெளிநாடுகளில் தனியார் கம்பனிகள் இதனைச் செய்கின்றார்கள். எமது நாட்டிலுள்ளவர்கள் இதனையே பிரதானமான பணி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவல்ல எமது பணி எனவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post